Sunday, December 18, 2016

கலவி

கருமேகம் துவைத்து
கடுமழை எடுத்து   
காயப்போடும்
மாயம் நானறியேன்

கனல் நீரை தேக்கி
குளத்தினில் நிரப்பி
குளித்து மகிழும்  
கலையை நானறியேன்

கொடிமின்னலை கூட்டி
நிலத்தினில் நிறுத்தி
விளைய செய்யும்
வித்தை நானறியேன்


விண்மீனை பிடித்து
மண்பானையில் அடைத்து
பொன் வேலை செய்யும்
கண்ஜாலமும் நானறியேன்

அன்றி .....

என் தேகம் குழைத்து
உன் பாகம் தீட்டி
நன் போகம் கொள்ளும்
மன்மத வியூகம் நானறிவேன் 

நன்றாய் நானறிவேன்...

No comments:

Post a Comment